சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, 70 நாட்களை கடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேசமயம் கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால், தவறு செய்பவர்களை, தமிழில் கமல் செய்தது போல மென்மையாக கண்டிக்காமல், போட்டியாளர்களிடம் கடுமையும் கண்டிப்பும் காட்டி வருகிறார். இதனால் சனி, ஞாயிறு வந்தாலே சில போட்டியாளர்களுக்கு நடுக்கம் வந்து விடுகிறது.
அந்தவகையில் கிடிலம் பைரோஸ் என்பவர் சக பெண் போட்டியாளரான டிம்பிள் பாயை தொடர்ந்து விமர்சிக்கும் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதற்காக அவரை கடந்த வாரம் ரொம்பவே கடிந்து கொண்டார் மோகன்லால். அவரை வெளியேற்றி விடலாமா என்று கூட, டிம்பிளிடம் கேட்டு, அவர் மன்னித்ததால் விட்டுவிட்டார் மோகன்லால்.
அதேபோல இன்னொரு போட்டியாளரும், கடந்த 15 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருபவருமான மணிக்குட்டன் என்கிற நடிகரையும் அவருக்கு தலைக்கனம் அதிகமாகி விட்டதாகவும், இதனால் பிக்பாஸ் வீட்டின் முகமே மாறுகிறது என்கிற ரீதியிலும் கண்டித்தார் மோகன்லால். இதனை தொடர்ந்து நேற்றைய எபிசோடின் போது, தான் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேற விரும்புவதாகவும், தன்னை கன்பெஷன் அறைக்கு கூப்பிடுமாறும் கேட்டுக்கொண்டார் மணிக்குட்டன்.
அப்படி தன்னை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றாத வரை, தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்தார். கன்பெஷன் அறைக்கு பிக்பாஸ் அழைத்தபோது, தன்னால் மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்றும், சினிமாவில் 15 வருடங்களாக சேர்த்து வைத்த நல்ல பெயர் இந்த நிகழ்ச்சியின் மூலம் போய்விடும் என்றும் கதறினார்.
ஒரு கட்டத்தில் மணிக்குட்டன் மட்டுமல்ல, சக போட்டியாளர்களே எதிர்பாராத விதமாக, பிக்பாஸ் வீட்டின் மெயின் கதவை திறந்துவிட சொன்ன பிக்பாஸ், அவர் விரும்பினால் வெளியேறி கொள்ளலாம் என கூறினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் மணிக்குட்டன். ஆனாலும் அவர் திரும்பி வருவார் என சக போட்டியாளர்களில் சிலர் எதிர்பார்க்கின்றனர்.