டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, தனது தாயின் வழியை பின்பற்றி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஹீரோ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக 'ஹ்ருதயம்' என்கிற படத்தில் நடிக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கிவரும் இந்தப்படத்தில் தனது படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்யாணி, “நான் சினிமாவுக்கு வந்தது மற்ற சிலரை போல அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அல்ல.. எனது சிறுவயது விடுமுறை தினங்கள் எல்லாமே என் தந்தையின் படப்பிடிப்பு தளத்தில் தான் கழிந்தன. என் தந்தை படப்பிடிப்பு சமயங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்ததை போல, வேறு ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. அப்போதே நானும் எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு சந்தோஷ மனுஷியாக வாழவேண்டும் என முடிவுசெய்தே இந்த துறைக்குள் நுழைந்தேன்.. ஹ்ருதயம் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட இந்த இரண்டு மாதங்களும் அப்போது நான் கண்ட அந்த கனவு நனவானதை நிஜமாகவே உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.