என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19 (1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இந்து வி.எஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ரொம்பவே சுவாரசியமான அதேசமயம் மர்மங்கள் நிறைந்த கதாபாத்திரம் என்று ஒரு பேட்டியில் நித்யா மேனன் கூறியிருந்தாலும், அதுபற்றிய ரகசியத்தை அவர் உடைக்கவில்லை.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் இயக்குனர் இந்து வி.எஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன என்பதை வெளிபடுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “விஜய்சேதுபதி இந்தப்படத்தில் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் தமிழ், மலையாளம் இரண்டையும் சரிசமமான அளவில் பேசியிருக்கிறார்.. மலையாள வசனங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, படப்பிடிப்பு தளத்திற்கு முன்கூட்டியே வந்து, அன்றைய காட்சிகள், வசனங்களை குறித்து விவாதித்து, அதன்பின்னர் படப்பிடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்” என புகழ்ந்து கூறுகிறார் இயக்குனர் இந்து வி.எஸ்.