அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் தங்களது புதிய படத்தை ஆரம்பித்துள்ளது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர்கள் கூட்டணியில் இருந்து பிருத்விராஜ் விலகிய நிலையில், இப்போது இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெயர் '18-ஆம் படி'. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ரஞ்சித் வெளியிட இருக்கிறார்.
இந்தப்படத்திற்கான புதுமுக நடிகர்கள் தேவை என்கிற அறிவிப்பை நடிகர் நிவின்பாலி தனது பேஸ்புக் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் “இன்று நல்ல துவக்கம் தரும் நாளாக அமைந்துள்ளது. குறிப்பாக நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த நாள் இனிய நாள். '18-ஆம் படி' படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்காக '18-22 வரையிலான ஆண்களும் பெண்களும் வரவேற்கப்படுகிறார்கள்” என கூறியுள்ள நிவின்பாலி, இந்த தகவலை மற்றவர்களும் அறிந்துகொள்ளும் விதமாக ஷேர் பண்ணுமாறும் கூறியுள்ளார்.