வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார். இந்தியாவில் வேறெந்த நடிகருக்கும் இந்த கெளரவம் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
மோகன்லால் இதுநாள் வரை இந்தப்பதவியை பயன்படுத்தி முறைகேடாக எதுவும் செய்ததில்லை... அனால் அவரது வீட்டில் யானைத்தந்தங்கள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, இந்த கர்னல் பதவியை அவரிடமிருந்து திரும்ப் பெற வேண்டும் என்கிற கோஷம் சிலரிடம் எழுந்தது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லலை.. தற்போது மீண்டும் அதெ பிரச்சனை தலை தூக்கியுள்ளது வேறு ஒரு காரணத்தை முன்னிட்டு.
அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு மோகன்லால் கேரளா அரசின் சுற்றுலா துறைக்காக ஒரு விளம்பரத்தில் நடித்துக்கொடுத்தார்.. இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இந்த விளம்பரத்தில் அவர் 1971 ராணுவ வீரர் போல யூனிபார்ம் அணிந்து நடித்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ கர்னலுக்கான மெடல்களை அதிகப்படியாக அணிந்து நடித்துள்ளார் என்றும், இது ராணுவ மரியாதையை அவமதிப்பதாகவும், அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறி முன்னாள் பிரிகேடியர் குற்றம் சாட்டியுள்ளதோடு மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கர்னல் பதவியை ராணுவம் அவரிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் என புகார் தொடுத்துள்ளாராம்.