பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். சுமார் 29 படங்களில் இணைந்து கதை எழுதியுள்ள இந்த ஹிட் கூட்டணி, மோகன்லாலின் 'ட்வென்டி 20', 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'கிலுக்கம் கிலுகிலுக்கம்' உள்ளிட்ட பல படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளது..
இந்த கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்த உதயகிருஷ்ணா முதன்முதலாக கதை எழுதிய படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, 130 கோடிகளை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்'.. மலையாள சினிமாவின் தரத்தையும், பிசினஸ் வேல்யூவையும் விரிவாக்கியதில் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மலையாள இயக்குனர்கள் சங்கம் உதயகிருஷ்ணாவுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரும், இயக்குனர் சங்க செயலாளருமான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளார்.