'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மோகன்லாலை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்கும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனுக்குத்தான் முதலிடம் என்றே சொல்லலாம். மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராட் என தொடர்ந்து மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிவர் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. மோகன்லாலுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஒலிப்பது இவரின் குரலாகத்தான் இருக்கும். மோகன்லாலின் மீதான தனது மரியாதையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக திருவனந்தபுரத்தில் தான் துவங்கியுள்ள ஹோட்டலுக்கு, மோகன்லால் நடித்த படத்தின் டைட்டிலான 'கிராண்ட் மாஸ்டர்' என்கிற பெயரையே வைத்துள்ளார்.
மோகன்லாலுடன் இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு கொண்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன் மீண்டும் நான்காவது முறையாக மோகன்லாலை வைத்தே தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதை தனது முகநூலிலும் அறிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ஆம் தேதி துவங்க இருக்கிறது.. மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தான் இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மே மாதம் சம்மர் ட்ரீட்டாக இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.. மற்ற நட்சத்திரங்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.