‛அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் | ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை! களமிறங்கிய பீட்டா இந்தியா!! | ரஜினியின் ‛வேட்டையன்' ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு | ''என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்'': நெப்போலியன் மகன் வீடியோ வெளியீடு | ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம் | டைட்டிலை கைப்பற்ற போராடும் ‛கேம் சேஞ்சர்' தயாரிப்பாளர் | விஜய் 69வது படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா? | "பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்": அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | நாளை வெளியாகும் 'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல்! | மகேஷ் பாபு - ராஜமவுலி பட படப்பிடிப்பு எப்போது? |
பஞ்சுப் பாதங்களை முத்தமிட பாயும் அலைகள், நீயே அழகியென சத்தமிட உயிர் பெற்றிடும் சிலைகள்... மண்ணில் உலாவும் என்றுமே தேயாத அழகு நிலா, துள்ளி திரியும் மான் இனங்களில் நீ மிளா, இளசுகளின் இதயங்களுக்கு வலை வீசும் கூந்தல், கனவுகளை களவாடும் கண்கள்... என கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் கோபிகா உன்னிகிருஷ்ணன் மனம் திறக்கிறார்...
இவ்வளவு அழகாக இருக்கீங்களே எங்கே இருக்கீங்க
கேரளாவில் என் சொந்த ஊர் திருச்சூரில் தான் இருக்கேன்... மலையாள டிவி சேனல்களில் நிறைய நிகழ்ச்சிகள் பண்றேன். பிளஸ் 2 முடித்ததும் மாடலிங் துறைக்கு வந்துட்டேன். முதன் முதலாக தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறேன்.
மலையாளம் டூ தமிழ் சினிமாவில அறிமுகம் எப்படி
மாடலிங் பண்ணிட்டு இருக்கும் போதே தமிழில் வாய்ப்பு வந்ததால் ஓகே சொல்லிட்டேன். மாடலிங், டிவி நிகழ்ச்சிகள் என ரொம்ப செலக்ட் பண்ணி தான் பண்ணுவேன். அப்படி தான் தமிழில் நடிக்க கதைகளை தேடிய போது இது கிடைத்து.
என்ன படம், என்ன கதை, இயக்குனர் ஹீரோ யார்
அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது சஸ்பென்ஸ்... நயன்தாரா உடன் நடித்த ஒரு பிரபல ஹீரோ தான் நடிக்கிறார். நான் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். காதல், காமெடி, ஆக் ஷன் என கமர்ஷியல் படமாக இருக்கும். இதை மட்டும் தான் இப்போ சொல்ல முடியும்...
தமிழ் ரசிகர்கள்...
தமிழ் பிடிக்கும்... தமிழ் ரசிகர்கள் புது முகங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பாங்க. இந்த படம் தமிழ்நாடு, கேரளாவில் படமாக்குறாங்க. கேரளாவிலேயே பாதி படப்பிடிப்பு முடிந்தது. அடுத்து என் கேரக்டர் உட்பட மீதி படப்பிடிப்புக்கு வெயிட்டிங்.
மாடல் அழகியான நீங்கள் எப்படி நடிக்க கத்துகிட்டீங்க
நடிப்புக்காக பயிற்சி எடுக்கலை... பல படங்கள் பார்த்து நானே கத்துகிட்டேன். அது தான் எனக்கு வாய்ப்பு தேடி கொடுத்திருக்கு. முதல் தமிழ் படத்திலேயே நடிப்பை நிரூபித்து, பல படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
சமீபத்தில் பார்த்த தமிழ்படம், ரீல்ஸ் நடிப்பு
சமீபத்தில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' பார்த்தேன். இன்ஸ்டாவில் ரீல்ஸ் பண்றது பிடிக்கும். நானே என் இன்ஸ்டாவை ஹேண்டில் பண்றதால அடிக்கடி ரீல்ஸ் பண்ண முடியலை. கராத்தே, பரதம், ஓவியம் தெரியும்.
இதுவரை நீங்கள் பெற்ற விருதுகள் எதுவும் இருக்கா
ஒரு நிறுவனத்தின் 2021ல் 'மிஸ் இந்தியா' விருது வாங்கியிருக்கேன். உமன் பிட்நஸ் பிசிக்ஸ் கேரளா டைட்டில் வின்னர் பட்டமும் கிடைச்சிருக்கு. இனி சினிமாவில் நடித்து விருதுகள் வாங்குறது தான் லட்சியம். அதை நோக்கி தான் ஓடிகிட்டு இருக்கேன்.