ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இசையமைப்பாளராக கலக்கி வருகிறார் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சாம் சி.எஸ். பெரும்பாலும் இவரின் இசை டெரர்ரான டார்க் ஹாரர், திரில்லர், ஆக் ஷன் ஆகவே இருந்துள்ளது. பாடல்கள் எழுதும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவரை இசையமைப்பாளராக்கி அழகு பார்த்தது தமிழ் திரையுலகம்.
அம்புலி '3டி'யில் துவங்கிய இசைப்பயணம் கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, அடங்கமறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், எனிமி, நோட்டா, ராக்கெட்டிரி என இசையமைத்த திரைப்படங்களின் பட்டியல் நீள்கிறது. அனைவராலும் கவனிக்கப்படும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அவரிடம் ஒரு பேட்டி:
குடும்பம் குறித்து...
எனது பூர்வீகம் மூணாறாக இருந்தாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் கம்பம். எழில் கொஞ்சும் இந்த இடத்தில் இளையராஜாவின் பாடல்களை கேட்டுதான் இசை ஆர்வம் தோன்றியது. அப்பா சார்லஸ், அம்மா ஜெபஸ்டி, மனைவி ஜானட், மகன் சில்பன் என அழகான குடும்பம் என்னுடையது.
திருச்சியில் எம்.சி.ஏ., படிக்கும் போது அங்குள்ள இசைக்குழு மூலம் ஆர்வம் தோன்றியது. சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் மாதம் லட்சம் ரூபாய் சம்பளத்தை விட்டு இரண்டு ஆண்டுகள் வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்போது குற்றாலம் மசாஜ் ஆயில் விளம்பரங்களை கூட சொற்ப வருமானத்திற்காக செய்துள்ளேன். பலர் கேலிக்கும் ஆளாகியுள்ளேன்.
ஹாலிவுட் படங்களை பார்த்து நான் இதற்கு இசையமைத்தால் எப்படி வரும் என டியூன்களை போட்டு அதை சேகரிக்க ஆரம்பித்தேன். அதன் தாக்கம் தான் தற்போது நீங்கள் கேட்கும் திரைப்பட பாடல், பின்னணி இசை எல்லாம்.
பாடலை உருவாக்கும் விதம் பற்றி...
ஆழ்மனதில் எதை அதிகம் விரும்புகிறோமோ அது வெளிப்படும் போது நல்ல இசை பிறக்கும். பொதுவாக கிரியேட்டிவ் என்பதில் முன்பு வந்த இசை ஏதோ ஒன்றின் தாக்கம் நிச்சயம் இருக்கும். பணி முடிந்த பின் இதுபோல் ஏற்கனவே வந்துள்ளதா என்ற சரிபார்ப்பேன்.
பாடல், பின்னணி இசை எதில் அதிக ஆர்வம்...
திரைப்படத்தின் பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி இசைக்கும் மிகுந்த சிரத்தை எடுக்கிறோம். ஆனால் அதற்கான அங்கீகாரம் இருக்கிறதா என்பது யோசிக்க வைக்கிறது. பாடல் கொண்டாடப்படும் அளவுக்கு பின்னணி இசைக்கும் விருது வழங்கப்பட வேண்டும். ஹாலிவுட்டில் பின்னணி இசைக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. அதுபோல் நம் இந்திய சினிமாவிலும் வர வேண்டும். திரைப்படத்தின் கதையோடு பயணிக்கும் பாடல், பின்னணி இசை என்பது தான் எனது ஆசை.
இசைக்கு இளையராஜா, பாடல் வரிகளுக்கு...
கவிஞர் கண்ணதாசன், வாலி. 'ஸ்பேட் ராஜா இதய ராணி' திரைப் படத்தில் கண்ணம்மா பாட்டை எழுதினேன். அம்புலி படத்தின் அனைத்து பாடல்கள், பின்னணி இசை என செய்தேன். 'தன னா தானா' என டம்மி எழுத்துக்களுக்கு பதில் கவிதை வரிகளையே பாடலாக பாடுவதே சிறந்தது என நினைக்கிறேன். வெஸ்டன் மியூசிக் எனக்கு பிடிக்கும்.
சக இசையமைப்பாளர்களின் நட்பு குறித்து...
அனைவரும் நட்பாக உள்ளனர். எங்களுக்குள் ஈகோ கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி உள்ளது. நல்ல இசை வெளிவர இது உதவுகிறது. விக்ரம் வேதாவுக்கு பின் ராக்கெட்ரி படவாய்ப்பை மாதவன் அளித்தார்.
வரக்கூடிய படங்கள் பற்றி..
ஹிந்தியில் விக்ரம் வேதா வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் சலுான், கோஷ்டி உள்ளிட்ட படங்களில் இசையமைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.