ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் | பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம் | பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! |

இதுநாள் வரை சின்னச்சின்ன படங்களில் இரண்டாம் நிலை ஹீரோக்களுடனோ அல்லது அறிமுக ஹீரோக்களுடனோ தான் நடித்து வந்தார் 'பிசாசு' புகழ் பிரயாகா. தற்போது அடுத்ததாக திலீப்புக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தனது சினிமா கேரியரில் அடுத்த படியில் காலெடுத்து வைத்திருக்கிறார் பிரயாகா.. இந்தப்படத்தை அருண்கோபி என்பவர் இயக்குகிறார். வரும் ஜனவரியில் இந்தப்படம் தொடங்கப்பட இருக்கிறது.
இந்தப்படத்தின் ஹீரோ மட்டும் பெரிய ஆள் இல்லை.. தயாரிப்பாளரும் பெரிய ஆள்தான்... ஆம்.. மோகன்லால் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் தோமிச்சன் முளகுபாடம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.