ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற தனி ஒருவன் திரைப்படம் ‛துருவா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ராம் சரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது
தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி இப்படத்திலும் வில்லனாக நடிக்கின்றார். ராம் சரணுக்கு இணையான முக்கியத்துவம் அரவிந்த் சாமிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனை மெய்பிக்கும் வகையில் ‛எனது எதிரிதான் எனது பலம்' என்ற வாசகத்துடனே பஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்துள்ளது. ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் நாசர், பூஷனி கிருஷ்ண முரளி மற்றும் பலர் நடிக்கின்றனர். துருவா திரைப்படம் அக்டோபரில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.