அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
மலையாள இளம் நடிகர் முன்னணி நடிகர் ஆசிப் அலி.. சில நாட்களுக்குமுன் நெட்டிசன்களால் குறிப்பாக மதச்சார்புடையவர்களால் கண்டனங்களுக்கு ஆளானார்.. காரணம் பேஸ்புக்கில் அவர் பதிவிட்ட ஒன்றிரண்டு இரண்டு புகைப்படங்கள்.. ஆசிப் அலி, அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இருப்பது போன்று புகைப்படம் தான் அவை. அதை தனது ரசிகர்களும் பார்க்கட்டுமே என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் மதத்தின் பெயரால் அவர் மீது கண்டனங்கள் கிளம்பும் என அவர் எதிர்பார்க்கவில்லை.. காரணம் புகைப்படத்தில் ஆசிப் அலியின் மனைவி பர்தா அணியவில்லை. முகத்தை மூடியிருக்கவில்லை..
இது ரம்ஜான் மாதம் என்பதால் வீட்டைவிட்டு வெளியே வரும் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து, முகத்தை மூடி வரவேண்டும் என்கிற நியதியை ஆசிப் அலியின் மனைவி கடைபிடிக்கவில்லை என்றும் அந்த புகைப்படங்களை மற்றவர்களின் பார்வையில் படுமாறு பேஸ்புக்கில் ஏன் ஆசிப் அலி பதிவிட்டார் என்றும் மாறி மாறி கண்டனங்களை வீசினார்கள்.. ஆனால் ஆசிப் அலி பதிலுக்கு கோபப்படவில்லை. அதேசமயம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அந்தப்படங்களை நீக்கவும் இல்லை.. மாறாக தானும் தனது மனைவி, குழந்தையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட இன்னும் சில புகைப்படங்களை மீண்டும் பதிவிட்டு, நான் இப்படித்தான்.. நீங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என துணிச்சலாக பதிலடி கொடுத்துள்ளார்.. அவரின் இந்து துணிச்சலான செயலை திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.