ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
மலையாளத்தில் பிசியான முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கும் 'ஆன் மரியா களிப்பிலானு' என்கிற படத்தில் முதன்முறையாக கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். நம்பமுடியாவிட்டாலும் கூட, இது நிஜம் என்பதை துல்கர் சல்மானே தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன் ஐந்து குறும்படங்களை உள்ளடக்கிய '5 சுந்தரிகள்' படத்தில் ஒரு குறும்படத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகும் கேரக்டரில் நடித்திருந்தாலும் கெஸ்ட் ரோலில் அவர் நடிப்பது இதுதான் முதன்முறை.. இரண்டு காரணங்களுக்காக இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
ஒன்று அவரது நண்பர் சன்னி வெய்ன்.. துல்கர் சல்மான் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர்தான் இந்த சன்னி வெய்ன்.. இந்தப்படத்தின் மூலம் நட்பான இவர்கள் அடுத்ததாக 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' மற்றும் சமீபத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 'கம்மட்டிப்பாடம்' படத்தில் சன்னி வெய்ன் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.. இப்போது நான்காவது முறையாக சேர்ந்து நடிக்கும் படம் இது.. துல்கர் சொல்லும் இன்னொரு காரணம், அவருக்கு குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் நடிக்கவேண்டும் என்கிற தீராத ஆசை இதன்மூலம். நிறைவேறிவிட்டதாம். இந்தப்படத்தில் 'தெய்வத்திருமகள்' பேபி சாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.