‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

கேரளாவில் கடந்த 2017ல் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் எட்டு வருடம் கழித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். ஆறு பேர் குற்றவாளிகள் என கூறி அவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பேசிவந்த பலருக்கும் திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்ட நடிகையுடன் நாங்கள் நிற்கிறோம், அவருக்கு முழுமையான நீதி வேண்டும் என்பது போன்று தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் அதேநாளில், திலீப் நடிப்பில் வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாக இருக்கும் ப ப ப பாடல் போஸ்டர் ஒன்றை நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதுடன் இந்த பாடல் காட்சியில் அவரும் திலீப்பும் இணைந்து ஆடியும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக கடந்த பல வருடங்களாகவே குரல் கொடுத்து வருபவரும் சமீபத்திய தீர்ப்பு குறித்து விமர்சித்து வருபவருமான நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான பாக்கியலட்சுமி என்பவர் மோகன்லாலின் இந்த செயல் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “தீர்ப்பு வெளியான அதே நாளில் பலரும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், மோகன்லாலோ சம்பந்தப்பட்ட நடிகரின் பட புரமோஷன் செய்வது போல தனது சோசியல் மீடியாவில் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த சமயத்தில் இதை செய்வது சரியாக இருக்குமா என்று அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லையே.. அது தான் வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.