ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

கேரளாவில் தற்போது திருவனந்தபுரத்தில் கேரள சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த டிசம்பர் 12 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 160 படங்கள் கலந்து கொண்டு திரையிடப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் 19ம் தேதி இந்த திரைப்பட திருவிழா நிறைவடைகிறது. இந்த நிலையில் 19 படங்கள் இந்த விழாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் மத்திய அரசின் ஆதிக்கவும் இருப்பதாகவும் கேரள கலாச்சார மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “187 படங்கள் இந்த சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்ள விண்ணப்பங்களை அனுப்பி இருந்தன. அனைத்துமே குறித்த நேரத்தில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பினாலும் இதில் 19 படங்கள் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாலஸ்தீனிய தொடர்புடைய படங்கள் இந்த மறுக்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது. யாரோ ஒருவருக்கு பயந்து கொண்டு அவர்கள் இதை செய்கிறார்கள். அடுத்தாண்டு இது போன்ற திரைப்பட திருவிழா இங்கே நடக்குமா என்பது தெரியவில்லை. மத்திய அரசு தடை செய்த அந்த படங்களை இந்த விழாவில் திரையிட அனுமதிக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.