டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆத்வி சேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டகோய்ட் ; தி லவ் ஸ்டோரி'. இந்த படத்தை ஷனைல் தியோ இயக்கி வருகிறார். கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஆத்வி சேஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் நடித்த ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் இவர்கள் இருவருக்குமே சிறிதும் பெரிதுமாக காயங்கள் ஏற்பட்டன.
ஆத்வி சேஷுக்கு காயங்கள் சிறியது தான் என்றாலும் படப்பிடிப்பு இடைவேளையில் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டும் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். ஆனால் மிருணாள் தாக்கூர் தனது காயங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்தாராம். இந்த படத்தில் மிருணாள் தாக்கூருக்கு பதிலாக முதலில் ஒப்பந்தமானவர் ஸ்ருதிஹாசன் என்பதும் படத்தில் கதாநாயகனின் குறுக்கீடு அதிகம் இருந்ததால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.