ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஷான் ரகுமான். மம்முட்டி நடித்த ஈ பட்டணத்தில் பூதம் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து மோகன்லால், திலீப் பிரித்விராஜ் மற்றும் இளம் கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்ல தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, வரலாறு முக்கியம் உள்ளிட்ட சில படங்களில் இசையமைத்துள்ளார் ஷான் ரகுமான்.
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கொச்சியில் மிகப்பெரிய லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ஷ்ஹான் ரகுமான். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்து நடத்தித் தந்தவர் நிஜு ராஜ் ஆபிரகாம் என்பவர். இது போன்ற லைவ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி கொடுத்து வரும் அவர் ஷான் ரகுமானின் இசை நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தி கொடுத்தார். ஆனால் ஷான் ரகுமான் நிஜூ ராஜ் ஆபிரகாமுக்கு பேசியபடி உரிய தொகையை தரவில்லை என தெரிகிறது. தற்போது இதுகுறித்து அவர் போலீசில் அளித்துள்ள புகாரின் பேரில் ஷான் ரகுமான் மீதும் அவரது மனைவி மீதும் எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து உடனடியாக நிஜு ராஜ் ஆபிரகாமுக்கு பணம் தராமல் இழுத்தடித்ததாகவும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்த நிறுவனம் பணம் கொடுத்ததும் தருவதாக கூறியதாகவும் அந்த தொகையாக 38 லட்சம் ஷான் ரகுமானுக்கு வந்த பிறகும் கூட தனக்கு சேர வேண்டிய தொகையை அவர் திருப்பித் தர மறுத்ததால் தான் தற்போது காவல்துறையில் அவர் மீது நிஜு ராஜ் ஆபிரகாம் புகார் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த பிரச்னையை பெரிதாக்க விடாமல் நிஜு ராஜ் ஆபிரகமுடன் பேசி செட்டில் செய்ய ஷான் ரகுமானின் நண்பர்கள் தரப்பில் முயன்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.