100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். இவரது நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'ரேகசித்திரம்' என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடித்துள்ள 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் தீபு கருணாகரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கதாநாயகியான அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அவரது சோசியல் மீடியா பக்கங்களில் கூட இந்த படத்தின் பாடல்களை புரமோட் செய்ய மறுக்கிறார் என்றும் குற்றச்சாட்டாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் இது குறித்து விரிவாகவே விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறும்போது, “இயக்குனர் தற்போது என்னை பற்றி திரையுலகினரும் ரசிகர்களும் எதிர்மறையாக நினைக்கும் விதமான செய்திகளை தேவையில்லாமல் பரப்பி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்னையால் நிற்கும் நிலை வந்தபோது கூட என்னிடம் அவர், “உனக்கு சம்பளம் தராவிட்டால் நீ ஷூட்டிங்கிற்கு வர வேண்டாம்.. படம் நின்றாலும் பரவாயில்லை.. பணத்தை கறாராக கேட்டு வாங்கு” என்று கூறினார்.
ஆனால் ஒரு தயாரிப்பாளரின் சிரமம் அறிந்தவள் என்பதால் என்னால் படப்பிடிப்பு தடைப்படக்கூடாது என்பதற்காக பணம் வாங்காமலேயே தான் நடித்துக் கொடுத்தேன். ஆனால் இப்போது அதிக பணம் கேட்டு நான் நடிக்க மறுத்ததாக என் மீது குற்றம் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இந்தப் படத்தை வேண்டிய அளவிற்கு நான் என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் புரமோட் செய்து வருகிறேன். ஆனால் அதை அவர் இருட்டடிப்பு செய்து பேசி வருகிறார். அது மட்டுமல்ல இந்த படத்தின் புரமோஷனில் எப்போது கலந்து கொள்ள வேண்டும் என நாங்களாகவே தொடர்பு கொண்டு கேட்டபோது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வந்தது.
அதன் பிறகு அது குறித்து முறையான தகவல் எதுவும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. ஒரு படத்திற்கு புரமோஷன் என்பதை ஒப்பந்தத்தில் எழுதி தான் கையெழுத்திட வேண்டும் என்பதில்லை.. ஒரு நடிகையாக என்னுடைய படங்களை புரமோட் செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு. படத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கியமான ஒன்று என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். இப்போதும் சொல்கிறேன் எனக்கு முறைப்படி தகவல் தெரிவித்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன்.
அதேசமயம் இப்படி இயக்குனர் பொதுவெளியில் என்னைப் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் விதமாக கருத்து கூறி வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இது குறித்து நான் தற்போது நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளேன். இப்டி தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் அனஸ்வரா ராஜன்.