47 வயதில் திருமணம் செய்து கொண்ட சுப்பராஜு | சித்தார்த் பட பாடலாசிரியர் மரணம் | 'குட் பேட் அக்லி' இசை உறுதி செய்த ஜிவி பிரகாஷ்குமார் | நடிகர் தர்ஷன் மீது தவறாக குற்றம் சாட்டியுள்ளனர் : சூடு பிடிக்கும் வழக்கு | காளிதாஸ் ஜெயராம் திருமணம் : தமிழக முதல்வருக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு | அமரன் இயக்குனரை நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் | தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் |
தெலுங்கு திரையுலகில் ஓரளவு பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவரான குலசேகர் என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2006ல் பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாடலாசிரியராக மாறினார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஆர்.பி பட்நாயக் (ஜெயம் பட இசையமைப்பாளர்) இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள இவர் பாடல்களால் மட்டுமல்ல பரபரப்பான விஷயங்களாலும் இன்னும் பிரபலமானார்.
2018ல் காக்கிநாடாவில் உள்ள ஒரு தேவி கோவிலில் குலசேகர் திருடும்போது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைல் போன்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என கைப்பற்றப்பட்டன. இவரது இந்த குற்றச்செயலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரிடமிருந்து விலகி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.