புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
மலையாளத் திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மறைந்த பிரபல மூத்த நடிகரான பாலாஜியின் மகள் சுசித்ராவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஸ்மாயா என்கிற மகளும் பிரணவ் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் பிரணவ் மோகன்லால் கடந்த சில வருடங்களாக ஒரு நடிகராக தனது பயணத்தை தொடங்கி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் குறித்து இதுவரை தான் கூறாத சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் அவரது மனைவி சுசித்ரா.
இது பற்றி அவர் கூறும்போது, “மோகன்லால் நடித்த முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்திலிருந்து அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் தான் அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் தினசரி ஐந்து போஸ்ட் கார்டுகள் அவருக்கு தொடர்ந்து என் பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வந்தேன். ஒரு கட்டத்தில் அது நான்தான் என அவர் கண்டுபிடித்து விட்டார். எனக்கு திருமணம் என்கிற பேச்சு வந்தபோது மோகன்லாலை நான் விரும்புவதாக வீட்டாரிடம் கூறினேன். என் தந்தை தனது நெருங்கிய நட்பில் இருந்த நடிகை சுகுமாரி மூலமாக இந்த விஷயத்தை மோகன்லாலிடம் தெரிவித்து அதை வெற்றிகரமாக எங்களது திருமணத்தில் முடித்து வைத்தார். வீட்டைப் பொறுத்தவரை அவரை சுந்தர குட்டப்பன் (அழகான பையன்) என்றுதான் செல்லமாக குறிப்பிடுவார்கள். இது அவருக்கே தெரியுமா என்று கூட எனக்கு தெரியாது,'' எனக் கூறியுள்ளார் சுசித்ரா.