வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் |
நடிகர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய அளவில் அதிகம் இளைஞர்களால் விரும்பப்படும் இளம் நடிகர். தெலுங்கில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடும் விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க வந்தார். இடையே ஷாஹிபா என்கிற ஒரு வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்திருந்த அவர் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தபோது அங்கிருந்த அரங்கின் படிக்கட்டில் இறங்கிய போது கால் ஸ்லிப் ஆகி தவறி விழுந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.
அதே சமயம் இந்த வீடியோவை தற்போது தனக்கான விளம்பரமாக மாற்றிக் கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. அப்படி தான் விழுவது போன்ற வீடியோவை எடிட் செய்து தான் படிகளில் கீழே விழுந்ததும் அப்படியே ஒரு படுக்கையில் லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டே போய் விழுவது போல இணைத்து புது வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் அவரை செல்லமாக ரவுடி என்று அழைப்பது வழக்கம். இந்த வீடியோவை வெளியிட்டு, “நான் கீழே விழுந்தது மிகப்பெரிய காமெடியாக போய்விட்டது. ஆனால் ரவுடியின் வாழ்க்கை என்றாலே இதெல்லாம் சகஜம் தானே.. ரவுடிகள் எல்லா பக்கமும் எப்போது என்று தெரியாமல் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். ரவுடி வாழ்க்கையில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது தான்” என்று சமாளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.