பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
சமீபகாலமாகவே மலையாள திரையுலகில், தமிழ் படங்களைப் போலவே பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கென படங்கள் ரிலீசான வருடங்களையோ அல்லது ஹீரோக்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையோ கூட கணக்கில் கொள்ளாமல் ஏதோ ஒரு சாதாரண நாளில் கூட இப்படி ரீ-ரிலீஸ் செய்வதை வாடிக்கையாக மாற்றியுள்ளார்கள். அந்த வகையில் கடந்த 2010ல் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அன்வர் திரைப்படம் 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறிய அமல் நீரத் இயக்கியிருந்தார்
இந்த படத்தில் கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்று இருந்த கிழக்கு பூக்கும் என்கிற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. ஆச்சரியமாக கடந்தவாரம் இதே அமல் நீரத் டைரக்சனில் குஞ்சாக்கோ போபன் மற்றும் பஹத் பாசில் இணைந்து நடித்த போகன்வில்லா திரைப்படம் வெளியான நிலையில் அவரது பழைய படம் ஒன்றும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அடுத்த வாரமே ரிலீஸ் ஆவது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.