மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் பீல் குட் காதல் கதையாக வெளியான படம் பிரேமலு. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்த நடிகை மமிதா பைஜூ இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். அதேபோல இந்த படத்தில் நஸ்லேன் என்பவர் அறிமுக கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்த நிலையில் மம்முட்டி நடித்த உண்ட மற்றும் டொவினோ தாமஸ் நடித்த தள்ளுமால ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் டைரக்ஷனில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் நஸ்லேன்.
இந்த படத்திற்கு ஆலப்புழா ஜிம்கானா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு பாக்ஸர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நஸ்லேன். இதற்காக அவர் தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு முறைப்படி பாக்ஸிங் பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. முதல் படத்தில் சாக்லேட் பாயாக நடித்துவிட்டு இரண்டாவது படத்திலேயே இப்படி அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.