சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் |

சமீபத்தில் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்களுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருவதால் மலையாள திரையுலகமே கலகலத்து கிடக்கிறது. வாய்ப்புக்காக சமரசம் செய்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு பக்கம் என்றால் தங்களது திறமையால் வாய்ப்பு பெற்ற பெண்கள் சீனியர்கள் என்கிற கோதாவில் இருக்கும் ஆண்களால் ரொம்பவே மட்டமாக நடத்தப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது.
பெண் இயக்குனர் ரேவதி வர்மா இதை தான் அனுபவப்பூர்வமாக சந்தித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2006ல் ஜோதிகா, குஷ்பூ, சரிதா நடிப்பில் தமிழில் வெளியான ‛ஜூன் ஆர்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ரேவதி வர்மா. 2013ல் மலையாளத்தில் வெளியான ‛மேட் டாட்' என்கிற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லால் நடித்திருந்தார். அவரது நடிப்புத் திறமைக்காகவே இந்த கதாபாத்திரத்தில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெண் என்பதாலேயே தன்னை அவர் மிகவும் மட்டமாக நடத்தியதாகவும் கூறியுள்ளார் ரேவதி வர்மா.
“குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் ஸ்டார்ட், ஆக்சன், கட் என்று குரலை உயர்த்தி பேசுவதை கூட பெண்களை அடக்கி வைத்தே பழக்கப்பட்டு விட்ட சமூகத்திலிருந்து வந்த நடிகர் லால் போன்ற ஆண் வர்க்கத்தினர் சிலர் விரும்புவதில்லை. அந்த படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய டைரக்ஷனில் நடிப்பது பற்றி அவர் பலரிடமும் கிண்டலாகவும் மட்டமாகவும் விமர்சித்து கூறிய வார்த்தைகள் என் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி விட்டன” என்று கூறியுள்ளார்.