கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல வருடங்களாக முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதாவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஆம்... தெலுங்கு திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகரான ராவ் ரமேஷ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள மாருதி நகர் சுப்பிரமணியம் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரைப்பட வெளியீட்டாளராக சினிமாவில் தற்போது நுழைந்துள்ளார் தபிதா. இந்த படத்தை லக்ஷ்மன் காரியா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆக., 23ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்த தகவலை தபிதாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




