டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மம்முட்டி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் டர்போ என்கிற படம் வெளியானது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை கொடுத்தவரும் புலி முருகன் பட இயக்குனருமான வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு டர்போ மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் டீசன்டான வசூலையும் வெற்றியையும் பெற்றது. படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது ஆச்சரியமாக இந்த படம் வளைகுடா நாடுகளில் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இதற்காக அரபு மொழியில் இந்த படத்தின் டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் டர்போ ஜோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மம்முட்டிக்கு அரபு மொழியில் டர்போ ஜாஸிம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டப்பிங் பணிகளையும் ஸ்டுடியோவுக்கே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் மம்முட்டி. பெரும்பாலும் மலையாள படங்கள் வளைகுடா நாடுகளில் நேரடியாக மலையாளத்திலேயே வெளியாவது தான் வழக்கம். இந்த நிலையில் மம்முட்டியின் டர்போ திரைப்படம் அரபு மொழியில் வெளியாவது ஆச்சரியமான ஒன்றுதான்.




