'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு பிறகு அடுத்த இடத்தில் பயணித்து வந்தவர் நடிகர் திலீப். ஆனால் கடந்த 2016ல் நடிகை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பிறகு திரையுலகிலும் பர்சனல் ஆகவும் நிறைய பிரச்சனைகளை சந்தித்த திலீப் திரையுலகில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். கடந்த எட்டு வருடங்களில் ஓரிரு வெற்றி படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019ல் வெளியான கோடதி சமக்சம் பாலன் வக்கீல் என்கிற படம் தான் கடைசியாக அவருக்கு ஒரு டீசன்டான வெற்றியை பெற்று தந்தது.
அதன் பிறகு இந்த ஐந்து வருடங்களில் தொடர்ந்து வெளியான அவரது ஏழு படங்களும் தோல்வி படங்களாகவே அமைந்தன. அதிலும் கடைசியாக வெளியான பாந்த்ரா மற்றும் கடந்த மாதம் வெளியான தங்கமணி ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த நிலையில் தங்கமணி படம் வெளியாகி சரியாக 50 வது நாளில் வரும் ஏப்-26 ஆம் தேதி திலீப் நடித்துள்ள பவி கேர் டேக்கர் என்கிற படம் வெளியாக இருக்கிறது.
வினீத் குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக வெளியான திலீப்பின் மூன்று படங்களும் சீரியஸான கதையம்சம் கொண்டதாக இருந்ததன. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வழக்கமான ஒரு திலீப் படமாக உருவாகியுள்ளதாம். அதனால் இந்த பவி கேர்டேக்கர் படம் திலீப்புக்கு ஒரு வெற்றி படமாக அமைந்து அவரை கை தூக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.