அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
கடந்த 20 வருடங்களாகவே முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அஜித்துடன் விடாமுயற்சி, கமல் நடிக்கும் தக் லைப் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ள திரிஷா சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒரு சிறிய பூந்தொட்டியை பரிசளித்து உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிஷா. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திரிஷா.