ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

எப்போதுமே சர்வைவல் திரில்லர் படங்கள் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் தருபவை. ரசிகர்களை இரண்டு மணிநேரம் கட்டிப் போடக் கூடியவை. அந்த வகையில் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் இதேபோன்று ஒரு சர்வைவல் திரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்திலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த மலையாள படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த போது குணா குகைக்குள் தவறி விழுந்த தங்களது நண்பனை உடன் வந்த நண்பர்கள் போராடிக் காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை. இதே போன்று எக்ஸிட் என்கிற இன்னொரு சர்வைவல் திரில்லர் படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. காட்டுக்குள் சுற்றி பார்க்க வரும் நான்கு டீன் ஏஜ் இளைஞர்கள் தங்களை அறியாமலேயே ஒரு அமானுஷ்ய பங்களாவிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த இரவு முழுவதும் அங்கிருந்து அவர்கள் வெளியேற நடத்தும் போராட்டமும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் தான் இந்த படத்தின் கதையாம். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என நம்பலாம்.




