ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் |
மலையாள இயக்குனர் டி.வி.ரஞ்சித் இயக்கி உள்ள படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பன்னம்'. இதில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கவுரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஹஸ்புல்லா இசையமைத்துள்ளார். வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் தலைப்பில் உள்ள 'பாரத' என்பதை நீக்க வேண்டும், அப்படி நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறிவிட்டார்கள். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி தயாரிப்பு பாரத என்ற பெயரை நீக்கி படத்தை வெளியிடுகிறது.