பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து |
தெலுங்கில் பிரபாஸ், தமிழில் சிம்பு, விஷால் போல மலையாளத்தில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் ஆக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். 15 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வந்தாலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஒரு கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஒரு லாபகரமான தயாரிப்பாளராகவும் வளர்ச்சியை தொட்டுள்ளார்.
தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் பாகமதி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். சிலமுறை சர்ச்சையான விஷயங்களில் இவர் பெயர் அடிபட்டாலும் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் அதே சமயம் திருமணம் பற்றியும் வாய் திறக்காமல் தனது பட வேலைகளை கவனித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மலையாள நடிகை அனுஸ்ரீ உடன் இணைந்து கலந்து கொண்டார் உன்னி முகுந்தன். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கிளம்பியது. இந்த செய்தி தனது கவனத்திற்கு வந்ததும் இதற்கு பதில் அளித்துள்ள உன்னி முகுந்தன், ‛‛இந்த மாதிரி செய்திகளை நிறுத்த வேண்டும் என்றால் நான் எவ்வளவு பணம் தர வேண்டும்'' என்று கிண்டலாக கேட்டுள்ளார்.