ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக மெதுவாக நகர்கிறது என்பதை தான் குறையாக சுட்டிக் காட்டினார்கள். இதன் காரணமாக தோல்வியை தான் இந்த படம் பரிசாக பெற்றுள்ளது.
படம் வரவேற்பு பெறாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹரீஷ் பெராடி வேறொரு வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, “இங்கே மோகன்லாலுக்கு எதிராக ஒரு லாபி செய்யப்பட்டு வருகிறது. அரசியலுடன் அவரை தொடர்புபடுத்தி வேண்டுமென்றே படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்கிறார்கள். இதுவே இந்த படத்தில் வேறு எந்த ஒரு நடிகர் நடித்திருந்தாலும் நிச்சயமாக வெற்றி படமாகி இருக்கும். ரசிகர்களுக்கு புதுமையை வரவேற்கும் எண்ணம் குறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் ஹரீஷ் பெராடி.
மோகன்லாலின் மீதுள்ள அபரிமிதமான அன்பினாலும் அவரது உழைப்பு வீணாகி விட்டதே என்கிற ஆதங்கத்தாலும் தான் ஹரீஷ் பெராடி இப்படி கூறியுள்ளார்.