டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஆரம்பமான இந்நிகழ்வு நேற்று டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியோடு 15 வாரங்கள் நடைபெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் பல்லவி பிரசாந்த் என்ற போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்து விவசாயி பல்லவி பிரசாந்த். அவருடைய எளிமைதான் அவரை வெற்றி பெற வைத்தது என்கிறார்கள். யு டியூப் மூலம் பிரபலமானவர் பிரசாந்த். அவரை 'ரைத்து பிட்டா' என்று அன்போடு அழைக்கிறார்கள் ரசிகர்கள்.
மற்ற போட்டியாளர்களை விடவும் பிரசாந்த் அதிக வாக்குகள் பெற்று வென்றுள்ளார். நேற்றைய இறுதிப் போட்டியில் சினிமா பிரபலங்களான ரவி தேஜா, அல்லரி நரேஷ், ராஜ் தருண், கல்யாண் ராம், நிதி அகர்வால், ஆஷிகா ரங்கநாத், சம்யுக்தா மேனன், நோ ஷெட்டி, சுமா கனகலா, அவரது மகன் ரோஷன் கனகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழஙகும் பிக் பாஸ் சீசன் 7, இதுவரையில் 11 வாரங்களைக் கடந்துள்ளது. இன்னும் நான்கு வாரங்களுக்குள் இதன் இறுதி போட்டி நடைபெறலாம்.




