பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் என்கிற மூவரும் கதாநாயகர்களாக இணைந்து நடித்த இந்த படம் மார்சியல் ஆர்ட்ஸ் கலையை பின்னணியாக கொண்டு, தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பழிவாங்கும் ஒரு கதையாக உருவாகி இருந்தது. இந்த படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் மிகுந்த வரவேற்பு பெற்று படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்தது.
இந்த படத்தை மின்னல் முரளி உள்ளிட்ட படங்களை தயாரிக்க சோபியா பால் என்பவர் தான் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி பல கோடிகளை அள்ளிய சமயத்தில் தான், ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக அதன் ஹீரோ ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு அதன் தயாரிப்பு நிறுவனம் விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கிய நிகழ்வு நடந்தது.. இதனைத் தொடர்ந்து ஆர் டி எக்ஸ் படத்தின் ஹீரோ ஆண்டனி வர்கீஸும் தங்களுக்கும் இதுபோல கார் பரிசாக தேடிவரும் என்று எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர்களுக்கு சூசகமாக தகவல் தெரிவிக்கும் விதமாக சோசியல் மீடியாவில் ஜாலியான பதிவுகளை இட்டு வந்தார்.
ஆனால் அவருக்கு கார் பரிசாக கிடைக்கவில்லையே தவிர படத்தின் ஆண்டனி வர்கீஸ்க்கு அதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் சோபியா பால். இந்த நிறுவனத்தின் ஒன்பதாவது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.