சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
2023ம் ஆண்டின் தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகின்றன. தமிழில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், கிடா, ரெய்டு” ஆகிய படங்கள் வெளியாகின்றன.
தமிழ்த் திரையுலகம் இந்த நான்கு படங்களுடன் தீபாவளியைக் கொண்டாட உள்ளது. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அங்கு, 'அலா நின்னு சேரி' என்ற ஒரே ஒரு நேரடி தெலுங்குப் படம் மட்டுமே நாளை வெளியாக உள்ளது. தமிழ்ப் படங்களான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்” ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு நாளை வெளியாகின்றன.
'கிடா' படமும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 'தீபாவளி' என்ற பெயரில் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. சல்மான் கான் நடித்துள்ள ஹிந்திப் படமான 'டைகர் 3' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி நவம்பர் 12 அன்று வெளியாகப் போகிறது. நான்கு டப்பிங் படங்களுடனும், ஒரே ஒரு தெலுங்குப் படத்துடனும் தெலுங்கு ரசிகர்கள் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடப் போகிறார்கள்.