அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
1990களில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலமாக முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள அவர், ஆந்திர அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தெலுங்கில் 2013ம் ஆண்டு டாட்டர் ஆப் வர்மா என்ற படத்தில் நடித்திருந்தவர், தமிழில் கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்த ‛என் வழி தனி வழி' என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுகின்ற ஆசை ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதோடு மகேஷ்பாபு உடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தனக்கு நீண்ட காலமாக இருப்பதாகவும், அப்படி அவர் படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அக்கா- அண்ணி போன்ற ஏதாவது கேரக்டர்களில் நடிப்பேன். ஒருபோதும் அவருக்கு அம்மாவாக மட்டும் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.