லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் செலெக்ட்டிவான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானின் அதிரடி பெண்கள் படையின் தலைவியாக ஆக்ஷன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் ஐந்தாவதாக உருவாகி வரும் நேரு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப்பின் முந்தைய திரில்லர் படங்களைப் போல அல்லாமல் இந்த படம் ஒரு நீதிமன்ற டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011ல் வெளியான கிராண்ட் மாஸ்டர் என்கிற படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.