அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிசியான நடிகராக நடித்து வருபவர் கிச்சா சுதீப். தற்போது தாணு தயாரிப்பில் கன்னடத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எம்என் குமார் என்பவர் சுதீப் மீது தன்னிடம் ஒப்பந்தம் செய்தபடி தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தராமல் ஏமாற்றி வருகிறார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே சுதீப்பை வைத்து கிட்டத்தட்ட நான்கு படங்கள் வரை தயாரித்தவர் தான். அதனால் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து இதுவரை அமைதி காத்த கிச்சா சுதீப், தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் இவ்வளவு நீண்ட காலமாக இந்த சினிமா துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. இதற்கு மேல் இந்த பிரச்சனை பற்றி பேசினால் அது நீதிமன்றத்தை அவமதித்தது போல ஆகிவிடும். அதனால் எது உண்மை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு தயாரிப்பாளரான ஹூக்கா ரகுமான் என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு தேவை என்றால் தனியாக நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியுள்ளார்.