தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் |

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக பணியாற்றி வரும் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கான கதை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபு படம் பற்றி அவர் கூறும்போது, நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி அட்வென்சர் பாணியிலான திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படம் ஒரு பாகத்துடன் முடியாமல் இதற்கு அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் விதமாக இதன் மைய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம் விஜயந்திர பிரசாத். அதேசமயம் இதன் அடுத்த பாகங்களில் இதே கதை தொடரும் என்று சொல்ல முடியாது.. கதை வேறாக இருக்கும்.. ஆனால் இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்வார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.