ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு | நயன்தாரா ஒரு சொகுசு பூனை: சுசித்ரா தாக்கு | படம் பிடிக்காமல் பாதியில் வெளியேறினால் பாதி கட்டணம் திருப்பித் தரப்படும்: புதிய திட்டம் அறிமுகம் |
துல்கர் சல்மான் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜஸ்வர்யா லஷ்மி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படக்குழுவினர்கள் கிங் விரைவில் வருகிறார் என குறிப்பிட்டு டீசர் விரைவில் வெளியாகும் என்று மறைமுகமாக தெரிவித்து புதிய போஸ்டர் உடன் தெரிவித்துள்ளனர். வருகின்ற ஓணம் பண்டிகைக்கு இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.