நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கேரளாவில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூலை வேகமாக முந்தி வருகிறது சமீபத்தில் வெளியான '2018' என்ற படம். த்ரிஷ்யம், லூசிபர் சாதனைகளை முறியடித்து 10 நாளில் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்த படம் 2018ம் ஆண்டு கேளராவில் ஏற்பட்ட பெருமழை வெள்ளப்பெருக்கின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கின்போது நடந்த சம்பவங்களை அப்படியே படம் பிடித்திருப்பதால் கேரள மக்களோடு படம் மிகவும் நெருக்கமாகி இருப்பதும், படத்தின் சம்பவங்களை ஒவ்வொரு கேரள மக்களும் அனுபவத்திருப்பதால் படத்தோடு மக்களை தங்கணை இணைத்து கொள்வதால் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் படம் கேரளாவில் நடந்த இயற்கை பேரழிவு சம்பந்தப்பட்டது. இது மற்ற மொழிகளுக்கு கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகத்தில் மலையாளத்தில் மட்டுமே வெளியானது. ஆனால் மழைவெள்ள பாதிப்பு என்பது வெவ்வேறு கால கட்டங்களில் எல்லா மொழி மக்களும் அனுபவித்தவைதான் என்பதாலும் படத்தின் வெற்றியாலும் படத்தை பிற மொழிகளிலும் வெளியிட முயற்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜூட் ஆன்டனி ஜோசப் கூறியதாவது: இந்தப் படத்தை இயக்குவது மிகவும் கடிமான இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எனது முழு நேரமும் சக்தியும் இந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஒன்றும் சிறப்பான இயக்குநர் கிடையாது. அதே சமயம் இதற்கு முன்னால் பெரிய படங்களை இயக்கியது இல்லை. ஆனால், கடுமையான உழைப்பின் மூலம் எல்லோராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
தயாரிப்பாளரிடம் இந்தப் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியிட கோரினேன். இந்தப் படம் அந்த மக்களை எல்லாம் கனெக்ட் ஆகுமா, ஏனென்றால் மற்ற மொழிகளில் வெளியிட அதிக செலவாகும் என்றார். இது ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு. அதனால் உலகிலுள்ள அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகும் என்றேன்.
மும்பையில் படத்தை பார்த்தபோது உணர்ச்சிபொங்க அந்த பார்வையாளர்கள் கைதட்டிப் பார்த்தனர். மனித உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, மொழி வேறுபாடின்றி அவை எல்லோரையும் இணைக்க கூடியவை. கேரள வெள்ளத்தின்போது எனது வீடு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தேன். கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அந்தச் சம்பவம்தான் படமெடுக்க தூண்டியது. படம் மற்ற மொழிகளிலும் வெளியானால் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.