காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018ல் கேரளா மாநிலத்தையே உலுக்கிய பெரும் மழை வெள்ளைத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு, அப்போது நடந்த மீட்பு பணி, அதிலிருந்து கேரள மக்கள் மீண்டது என இவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஆச்சரியமாக இந்த படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து, தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூலையும் நெருங்கியுள்ளது.
இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடிக்க குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தான் இயக்கப் போவதாக கூறியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இவர் இயக்குனராக அறிமுகமானதே நிவின்பாலி கதாநாயகனாக நடித்த ஓம் சாந்தி ஒசானா என்கிற படத்தின் மூலம்தான். அந்த முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து இந்த 2018 படத்தில் கூட நிவின்பாலியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விதமாக காட்சிகளை எழுதியிருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். ஆனால் பின்னர் அது கதைக்கு தேவையில்லாத ஒன்று என நீக்கிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது முழு படத்திலும் நிவின்பாலி மட்டுமே கதாநாயகனாக நடிக்கும் விதமாக தன்னை அறிமுகப்படுத்தியவருக்கு நன்றிக்கடன் செலுத்த தயாராகிவிட்டார் ஜூட் ஆண்டனி ஜோசப்.