ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை உள்ளன. அவற்றில் சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அனைத்துத் தளங்களிலும் இருக்கிறார்கள். சிலர் ஒரு சிலவற்றில் மட்டுமே இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் தளத்தைப் பெரும்பாலும் நடிகைகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அவற்றில் விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவேற்றி வருகிறார்கள்.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள நடிகையாக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவருக்கு 85.5 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். நடிகர்களில் அக்ஷய்குமார் 64.5 மில்லியன் பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா 36.7 மில்லியன் பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நடிகர்களில் அல்லு அர்ஜுன் 20 மில்லியன் பாலோயர்களை சமீபத்தில் பெற்று முதலிடத்தில் உள்ளார்.