2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராகவும் சமீப ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக, சில படங்களில் கதையின் நாயகனாகவும் கூட நடித்து வருபவர் நடிகர் இந்திரன்ஸ். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்தவர் இவர்தான். பொதுவாக பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பெரிய வரலாற்று படங்கள் வெளியாகும்போது அதில் நடிக்காத நடிகர்களிடம் கேட்டால் எனக்கு பிடித்தது இந்த கதாபாத்திரம், இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் இந்திரன்ஸிடம் பாகுபலி படத்தில் நீங்கள் நடிக்க விரும்பினால் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என கேட்டார்கள். அதற்கு அவர் ஏதாவது சிறிய அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் ஒன்றை குறிப்பிடுவார் என நினைத்தால், கொஞ்சமும் யோசிக்காமல் பிரபாஸ் நடித்த பாகுபலி கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புகிறேன் என்று சீரியஸாகவே கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.