சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் | ‛பப்லு' பிரித்விராஜை பிரிந்துவிட்டாரா ஷீத்தல்? |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வழக்கமான படங்களில் இருந்து மாறி, புலிக்கும் மனிதனுக்கும் உண்டான பகை என்பதை மையப்படுத்தி ஒரு பேண்டஸி படமாக இந்த படம் உருவாகி இருந்ததால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன்பிறகு மோகன்லாலிடமிருந்து அப்படி ஒரு படம் எப்போது வரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதேபோன்ற கௌபாய் கதையம்சம் கொண்ட மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட சில படங்களின் மூலமாகவே குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கோல்டன் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய் சல்மரில் துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி, மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படம் நாளை (ஜன-19) வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.