பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் |
மோகன்லால் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியான படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி தளம் என மாறிமாறி வெளியாகின. சில வாரங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில், புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானாலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள அலோன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதே சமயம் இந்த படத்தை ஓடிடி தளத்தில் தான் வெளியிடுவதாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தை தியேட்டரில் திரையிட முடிவு செய்துள்ளதாகவும் அதனால் படத்தில் ஒரு பாடல் உட்பட 30 நிமிட காட்சிகள் இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்த படத்தின் வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் கேரளாவிலிருந்து கோவைக்கு செல்ல முயற்சிக்கும் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஒரு வீட்டில் மாட்டிக்கொள்ள நேர்கிறது. அதை மையப்படுத்தி ஒரே ஒரு நபராக மோகன்லால் மட்டுமே நடித்துள்ள ஒரு சாதனை படமாக இது உருவாகி உள்ளது.