சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூவ்ஸ். உதயதானு தாரம், நோட்புக், மும்பை போலீஸ், காயங்குளம் கொச்சுண்ணி, பிரதி பூவாங்கோழி, ஹவ் ஓல்ட் ஆர் யூ உள்பட பல படங்களை இயக்கியவர். தமிழில் ஜோதிகா ரீ-என்ட்ரி ஆன 36 வயதினிலே படத்தை இயக்கினார். இவர் இயக்கிய சாட்டர்டே நைட் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை மலையாள விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியிருப்பதாவது: 17 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். பார்வையாளர்களின் ஆதரவால்தான் இது சாத்தியமானது. எவருடைய விமர்சனங்களை தவறாகச் சொல்லவில்லை. சில விமர்சகர்களின் தரம் பற்றிதான் கவலைப்படுகிறேன். படம் பற்றி தவறான விமர்சனம் செய்துவிடுவதாகச் சொல்லி தயாரிப்பாளர்களைச் சிலர் மிரட்டுகின்றனர். 2 லட்சம் வாங்கிக்கொண்டு, மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று டுவீட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
யுடியூப் விமர்சகர்கள் படத்தின் இடைவேளையிலேயே வந்து படம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்க திரையரங்குகளில் முற்றுகையிடுகின்றனர். அவர்கள் வருமானத்திற்காக, திரைப்படங்களைக் கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களை சினிமா பார்வையாளர்களின் பிரதிநிதிகளாகக் கருதுகிறார்கள். நல்ல விமர்சனம் செய்யும் யுடியூபர்கள் குறைவு. படத்தை விமர்சிக்கட்டும், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயத்தை ஏன் இழுக்க வேண்டும்?
இவ்வாறு ரோஷன் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.