ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர். இவரது வாழ்க்கை விஜயானந்த் என்ற பெயரில் சினிமாவாகி உள்ளது. ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். விஆர்எல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை டிரைலரை வெளியிட்டு பேசியதாவது: நான் விஜய்யை 1985ல் சந்தித்தேன். ஒரு சாகசகாரராக தான் அவர் எனக்கு தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்க கூடியவர். அவர் இதுவரை நடத்திய அனைத்து தொழில்களுமே லாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் லோக்சபா எம்.பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமை தான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லா துறைகளிலும் பலத்தை கொடுத்து இருக்கிறது. அவர் எதை தொட்டாலும் வெற்றி தான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
படத்தின் நிஜ நாயகர் விஜய் சங்கேஸ்வர் பேசியதாவது : எனது 73 வருட வாழ்கையில் வாழ்கை எவ்வளவு அழகானது, ஆழமானது ஆச்சர்யமானது என்பதை கற்று கொண்டேன். இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய நேரம் இருந்து இருந்தால், நான் இன்னும் நிறைய விஷயங்களை செய்து இருப்பேன். அதனால் இளைய தலைமுறை உங்களது நேரத்தை ஆக்க பூர்வமாக செயல்படுத்துங்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கை தரும். இவ்வாறு அவர் பேசினார்.