நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த வசூல் பெறவில்லை.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற 'சைமா -2022' விருது வழங்கும் விழாவில் விஜய் தேவரகொண்டாவிற்கு ‛யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியன் சினிமா' என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பேசிய விஜய் தேவரகொண்டா, ‛நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் நம் அனைவரது வாழ்விலும் வரும். நம் வாழ்வில் மிக மோசமான நாட்களை கடந்திருப்போம். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே வாழ்க்கையில் முக்கியமானது. நான் இங்கு விருது வாங்குவதற்காக வரவில்லை. உங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன். இனி எனது பணியை சிறப்பானதாக செய்வேன். மக்களுக்கு பிடிக்கும் வகையில் நல்ல படங்களில் இனி நடிப்பேன். நிச்சயம் இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவிக்கிறேன்' என்று கூறினார்.