பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா |

இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா என்பது மட்டும்தான் கடந்த பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்று மட்டும்தான் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களைக் கூட 'பாலிவுட் மூவிஸ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால், ரஜினிகாந்தின் 'சிவாஜி' படம் அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகு ராஜமவுலியின் 'பாகுபலி' அந்த மாற்றத்தை இன்னும் அழுத்தமாகப் பதிய வைத்தது.
இந்த வருடத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்,' கன்னடப் படமான 'கேஜிஎப் 2', தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்' ஆகியவை உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்திப் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்தது.
'கேஜிஎப் 2' படத்தின் வெற்றி இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் இன்னும் அதிகமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கடுத்து தற்போது 'கன்டரா' படம் அதைத் தொடர்கிறது. செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த இந்தப் படம் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த பத்து நாட்களில் 50 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகா தவிர மற்ற மாநில ரசிகர்களும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
தென்னிந்திய சினிமாக்களில் அதிகமான வசூல் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் முன்னிலை வகித்தன. தரமான படங்களில் மலையாள சினிமா முன்னிலை வகித்தது. இப்போது வசூல், தரம் என இரண்டிலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு கன்னட சினிமா வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெருமையைக் கொடுத்து வருகிறது. மற்ற மொழி திரையுலகினருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.